×

வேட்டி சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி சுவாமி தரிசனம்

வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிரசாரத்துக்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு புறப்பட்ட பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார். அதிமுக- பாஜகவுடனான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று
 

வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பிரசாரத்துக்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு புறப்பட்ட பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார்.

அதிமுக- பாஜகவுடனான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். இதனை தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு மதுரையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளரகளை ஆதரித்து பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.