×

மோடி பதவியேற்ற மே-26 ஆம் தேதியை தேசிய கறுப்புநாளாக கடைபிடிப்போம்- திருமாவளவன்

மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று ‘தேசிய கறுப்பு நாளாக’ கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதிதான் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் 7 ஆண்டுளை நிறைவு செய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக
 

மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று ‘தேசிய கறுப்பு நாளாக’ கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதிதான் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் 7 ஆண்டுளை நிறைவு செய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை- எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள்.

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே-26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று ‘தேசிய கறுப்பு நாளாகக்’ கடைபிடிக்க வேண்டும். மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் மே.26 ஆம் தேதியை கறுப்பு நாளாகக் கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.