×

விஜய் சேதுபதி பட விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர் – நாயனார் நாகேந்திரன்

‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் செய்வதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாயனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானதில் இருந்தே, விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் #shameonyouvijaysethupathi என்ற ஹேஸ்டேக் கூட ட்ரெண்டிங்கில் இருந்தது. முத்தையா 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தாலும், அவர் மகிந்த
 

‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் செய்வதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாயனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானதில் இருந்தே, விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில் #shameonyouvijaysethupathi என்ற ஹேஸ்டேக் கூட ட்ரெண்டிங்கில் இருந்தது. முத்தையா 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தாலும், அவர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டாம் என பாரதிராஜா உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 800 படத்தில் நடிப்பதா? இல்லையா? என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக விஜய் சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என அரசியல் செய்வதாக நாயனார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு வழங்க இயலாது என அரசு கூறவில்லை, காலம் முடிவுற்றதால் இயலாது என கூறியிருப்பதாக தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு விவகாரத்தையும் அரசியல் ஆக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.