×

தென்காசி அருகே பரவுகிறதா மர்ம காய்ச்சல்?.. வெளியான பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14,901 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 14,901 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவ்வாறு கொரோனாவில் இருந்து தமிழகம் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், மற்றொரு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் என்ற கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒரு வித மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதரத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் முகாமிட்டு வீடு வீடாக ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.