×

“என்னை யாரும் கடத்தவில்லை” : கணவர் புகாருக்கு கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் மறுப்பு!

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். 35 வயதான இவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா(25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டில் தெரியவர அவர்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் கார்த்திகேயன் பொருளாதார வசதி இல்லாததும், அவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவரும் என்று தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சக்தி தமிழினி பிரபா கடந்த 5 ஆம்
 

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். 35 வயதான இவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா(25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டில் தெரியவர அவர்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் கார்த்திகேயன் பொருளாதார வசதி இல்லாததும், அவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவரும் என்று தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சக்தி தமிழினி பிரபா கடந்த 5 ஆம் தேதி கார்த்திகேயனை கோவையில் சுயமரியாதை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 19-ஆம் தேதி என் மனைவியின் தாய், தந்தை மற்றும் சிலர் என் வீட்டிற்கு வந்து என்னையும், என் அம்மாவையும் தாக்கிவிட்டு சக்தி தமிழினி பிரபாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். கார்த்திகேயன் மனைவி சக்தி தமிழினி பிரபாவின் தந்தை ஓய்வுபெற்ற காவலர் என்பதால் இதுகுறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருச்சியில் முகாமிட்டு இருந்த தனிப்படை போலீசார் சக்தி தமிழினி பிரபாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சக்தி தமிழினி பிரபா பெற்றோர் தன்னை கடத்தவில்லை. அவர்களை சமாதானம் செய்த பிறகு மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சக்தி தமிழினி பிரபா மற்றும் அவரது பெற்றோர் வரும் புதன் கிழமை கோவை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.