×

உடல் நலம் காக்கும் முருகன் ஆலயங்கள்

அறிவியல் ரீதியாக கற்கள், குகைகள் சூழ்ந்த இடம் நோய்கள் நெருங்கா வண்ணம் நல்ல சூழலை கொடுக்கும். அதனால்தான், செங்கல் இருந்தும் மன்னர்கள் காலத்தில் கற்களால் ஆலயங்கள் கட்டப்பட்டன. ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள். அதில் ஒரு படி மேலே சென்று, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என முருகன் ஆலயங்கள் மலை மேலேயே கட்டப்பட்டன. முருகனை வேண்டினால் உடல்
 

அறிவியல் ரீதியாக கற்கள், குகைகள் சூழ்ந்த இடம் நோய்கள் நெருங்கா வண்ணம் நல்ல சூழலை கொடுக்கும். அதனால்தான், செங்கல் இருந்தும் மன்னர்கள் காலத்தில் கற்களால் ஆலயங்கள் கட்டப்பட்டன.

ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள். அதில் ஒரு படி மேலே சென்று, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என முருகன் ஆலயங்கள் மலை மேலேயே கட்டப்பட்டன.

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்.

வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்.
நலம் பெற்றோர் ஏராளம்..
ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி பேரிடர் கடற்கரையோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகப் பெருமான் பக்கம் வரவேயில்லை.
இதைத்தான் பாடலாக சொன்னார்கள்.
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே..!
இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம். தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி.

மக்களெல்லாம் இக்கொடிய தொற்றிலிருந்து விடுபட முருகப் பெருமானே சொன்ன கந்த சஷ்டி கவசத்தை கோயில்களிலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி, வாசனை மலர்களால் அலங்கரித்து, உருக்கமாக பாட வேண்டும்.
முருகனுக்கு உகந்த நாளான செவ்வாயும், சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் ஒரு சேர வந்துள்ள இந்த நாளில் கொரொனா தொற்று பேரிடரிலிருந்து காப்பார் நம் அனைவரையும் முருகப்பெருமான். நிச்சயம் தன்னை மனமுருகி அழைக்கும் ஒவ்வொருவரையும் முருகப்பெருமான் காப்பார்.!


முருகா போற்றி..! கந்தா போற்றி..!! கதிர்வேலா போற்றி..!!!