×

சாத்தான்குள விவகாரம்: காவலர் முருகனின் ஜாமீன் மனு 4ஆம் முறையாக ஒத்திவைப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் காவலர் பால்துரை சமீபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், வழக்கில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கைதான காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ் மற்றும்
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் காவலர் பால்துரை சமீபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், வழக்கில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் கைதான காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடலில் இருந்த காயங்களால் தான் அவர்கள் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம் என சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல பிற காவலர்களுக்கும் ஜாமீன் கொடுக்க சிபிஐ இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனுவை 4 ஆவது முறையாக ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.