×

‘காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யலாம்’..விசாரணையை உடனடியாக கையிலெடுக்குமாறு நீதிபதிகள் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் உடலில் அதிக அளவில் காயம் இருப்பதால் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் உடலில் அதிக அளவில் காயம் இருப்பதால் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில், காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்ததால் இவ்வாறு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காவலர்கள் சமர்ப்பித்த அறிக்கையும் கிடைக்கப்பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளும் முரண்பாடாக இருப்பதால், இந்த வழக்குத்தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணையை இன்றே கையிலெடுக்கலாம் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.