×

கொரோனாவால் இறந்த தாய் – மகன் : இறுதி சடங்கு செய்ய முன்வராத உறவினர்கள்!!

கொரோனா பாதிப்பால் தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் . முதலில் இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது தாய்க்கும் உடல்நிலை குறைபாடு ஏற்படவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து
 

கொரோனா பாதிப்பால் தாயும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார் . முதலில் இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது தாய்க்கும் உடல்நிலை குறைபாடு ஏற்படவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் மகன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவரது தாய் மகன் இறந்த மறுநாள் உயிரிழந்து கிடந்தார். இவர்கள் இருவரின் இறுதி சடங்குகளை செய்ய அவர்களின் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை . இதையடுத்து பூவிருந்தவல்லி ஒன்றிய கவுன்சிலர் கௌதமன் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தாய்-மகன் இருவரின் உடல்களையும் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊராட்சி மன்றம் சார்பில் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.