×

அரசு பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் : 10 நாட்களில் ரூ.10 கோடி வருவாய்!

கடந்த 10 நாட்களில் பேருந்து போக்குவரத்து மூலம் அரசுக்கு ரூ.10 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடர் காலமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் மாதத்திற்கு பிறகு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து ஆரம்பமானது. இதனால் மக்கள் பணிகளுக்கும், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்தும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செப்டம்பர் 1
 

கடந்த 10 நாட்களில் பேருந்து போக்குவரத்து மூலம் அரசுக்கு ரூ.10 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் மாதத்திற்கு பிறகு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து ஆரம்பமானது. இதனால் மக்கள் பணிகளுக்கும், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்தும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செப்டம்பர் 1 முதல் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாநகர பேருந்துகள் மூலம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், தினமும் 2,400 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு 10 லட்சம் பேர் பயணம் செய்து வருவதாகவும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

மேலும் மாநகர பேருந்துகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததன் மூலம் ரூ.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஊரடங்கால் மக்கள் மட்டுமல்லாது அரசும் வருவாய் இழப்பால் திணறி வந்த நிலையில் பேருந்து போக்குவரத்து கணிசமான தொகையை ஈட்டி தந்துள்ளது கவனிக்கத்தக்கது.