×

கொரோனா பிடியில் மதுரை மாநகரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,640 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.