×

“ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி”…வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக பல கோடி சுருட்டிக் கொண்டு ஓடிய தனியார் நிதி நிறுவனம்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கீழவீதியில் எஸ்.வி.எஸ் அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வழங்கி வருகிறதாம். ஆனால் அந்த நிறுவனத்தில் பணம் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு அந்த பணத்திற்கான ரசீது வழங்கப்பட்டு, பின்னர் அவர்களது வங்கிக் கணக்கில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய கும்பகோணம் திருவிடைமருதூர், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பல பேர்,
 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கீழவீதியில் எஸ்.வி.எஸ் அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வழங்கி வருகிறதாம். ஆனால் அந்த நிறுவனத்தில் பணம் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாகச் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு அந்த பணத்திற்கான ரசீது வழங்கப்பட்டு, பின்னர் அவர்களது வங்கிக் கணக்கில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய கும்பகோணம் திருவிடைமருதூர், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பல பேர், இந்த நிறுவனத்தில் முன் பணம் செலுத்தியுள்ளனர்.

மக்கள் செலுத்திய பல கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிக் கொண்டு அந்த நிறுவனத்தினர் அங்கிருந்து காலி செய்துள்ளனர். தற்போது அந்த இடத்தை வாடகைக்கு விடப்படும் என்று அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதனை அறிந்த மக்கள் சிலர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், அந்த நிறுவனத்தினர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சென்றது மக்கள் பலருக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் நிதி நெருக்கடியில் பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், இந்த நிறுவனம் பண மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.