×

“பிரதமர் மோடி போட்டோலாம் எதுக்கு இருக்கு; அத தூக்குங்க” – உச்சக்கட்ட கோபத்தில் உச்ச நீதிமன்றம்!

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே விளம்பரப் பிரியர்கள் தான். ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம். விளம்பரப்படுத்தினால் தான் மக்களிடம் பிரபலமடையலாம் என்ற சூட்சுமத்தின் அடிப்படையில் அனைத்திலும் தங்களது புகைப்படங்களை எப்படியாவது நுழைத்துவிடுவார்கள். அண்மையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது ஆட்சியில் உபி வளர்ச்சி குறித்து கொல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்தது அதற்கு சிறந்த உதாரணம். மேற்கு வங்கத்தில் இருக்கும் கொல்கத்தாவுக்கும் யோகிக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விக்கான விடையில் தான் அந்த சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.
 

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே விளம்பரப் பிரியர்கள் தான். ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம். விளம்பரப்படுத்தினால் தான் மக்களிடம் பிரபலமடையலாம் என்ற சூட்சுமத்தின் அடிப்படையில் அனைத்திலும் தங்களது புகைப்படங்களை எப்படியாவது நுழைத்துவிடுவார்கள். அண்மையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது ஆட்சியில் உபி வளர்ச்சி குறித்து கொல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்தது அதற்கு சிறந்த உதாரணம். மேற்கு வங்கத்தில் இருக்கும் கொல்கத்தாவுக்கும் யோகிக்கும் என்ன சம்பந்தம்?

இந்தக் கேள்விக்கான விடையில் தான் அந்த சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம். விளம்பரப் பிரியர்களை வரிசைப்படுத்தினால் அவர் பெயரை விட்டுவிட முடியுமா என்ன? ஆம் சாட்சாத் பிரதமர் மோடியே தான். நிலவில் இடம் கிடைத்தால் கூட அங்கும் தன்னுடைய புகைப்படத்தையும் வாசகத்தையும் ஒட்டிவைத்து விடுவார். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (இமெயில்) முகவரியில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்துள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமான வாசகங்களும் அதில் எழுதப்பட்டிருந்தன.

நீண்ட நாட்களாக இருந்ததை கடந்த வியாழக்கிழமை தான் உச்ச நீதிமன்ற பதிவாளர் கவனித்திருக்கிறார். உடனடியாக இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சூழலில் இன்று மின்னஞ்சல் முகவரியிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்த இடத்தில், உச்ச நீதிமன்றத்தின் புகைப்படத்தை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.