×

“நடமாடும் ரேஷன் கடை, செறிவூட்டப்பட்ட அரிசி, சிசிடிவி ஆட்டோ”.. அசத்தும் தமிழக அரசு!

தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் உட்பட பல்வேறு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களது நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும் தமிழகம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் நடைமுறைக்கு வரும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக நடமாடும் 3,501 ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். அதே போல மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 புதிய
 

தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் உட்பட பல்வேறு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களது நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும் தமிழகம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் நடைமுறைக்கு வரும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக நடமாடும் 3,501 ரேஷன் கடைகளை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். அதே போல மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 புதிய ஆட்டோக்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார். அந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருப்பதால், அது ரத்த உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை பிரச்னையை தவிர்க்கும். இதனால் ரத்தசோகை அதிகளவில் இருக்கும் திருச்சியில் இந்த திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.