×

“திரைப்படங்களில் ஒழுக்கக்கேடான விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்தவர் கமல்”

திரைப்பட நடிகர்கள் எந்தவித தியாக தன்மை செய்யாத நிலையில், உள்நோக்கத்தோடு மட்டுமே அரசியல் கட்சி தொடங்குகின்றனர் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொங்கம்பட்டி மற்றும் சொக்கம்பட்டி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கினை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “தங்கம் விலை ஒரு இலட்சம் ஆனாலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து
 

திரைப்பட நடிகர்கள் எந்தவித தியாக தன்மை செய்யாத நிலையில், உள்நோக்கத்தோடு மட்டுமே அரசியல் கட்சி தொடங்குகின்றனர் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொங்கம்பட்டி மற்றும் சொக்கம்பட்டி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கினை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “தங்கம் விலை ஒரு இலட்சம் ஆனாலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நிர்வாக திறமையின் காரணமாக தமிழகத்தில் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஆயிரம் மினி கிளினிக் செயல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,

திரைப்பட நடிகர்கள் எந்தவித தியாகத்தையும் செய்யாத நிலையில்,உள்நோக்கத்தோடு மட்டுமே அரசியல் கட்சி தொடங்குகின்றனர். கமல்ஹாசன் திரைப்படங்களில் ஒழுக்கக்கேடான விஷயங்களை மட்டுமே சொல்லிக்கொடுத்தார். எம்.ஜிஆர் இடத்தினை எந்த திரைப்பட நடிகராலும் நிரப்ப முடியாது” எனக் கூறினார்.