×

“அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்” ஊடகங்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

செய்தி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்பட்டது.ஆனால், ₹6 விலை உயர்த்தி ₹3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. பிற
 

செய்தி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

அதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்பட்டது.ஆனால், ₹6 விலை உயர்த்தி ₹3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்.

தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது. அனுமதிக்கு காத்திராமல் பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம். ஆனால், இபாஸ் கட்டாயம் என்று செய்தி போகிறது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்” எனக் கூறினார்.