×

முதல்வர் டெல்லி பயணம்!

குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக குடியரசு தலைவரை நாளை சந்திக்கவிருக்கிறார். நாளை பகல் 12 மணிடளவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசவிருக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பாதித்து வருகின்றனர். எனவே நீட் தேர்வை ரத்து
 

குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக குடியரசு தலைவரை நாளை சந்திக்கவிருக்கிறார். நாளை பகல் 12 மணிடளவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசவிருக்கிறார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பாதித்து வருகின்றனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலின் குடியரசு தலைவரிடம் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சந்திப்பின் போது மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கவிருக்கிறார். தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமெனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது. குடியரசு தலைவருடனான சந்திப்புக்கு பின் நாளை இரவே சென்னை திரும்பவுள்ளார்.