×

தளர்வுகளை தவறாக பயன்படுத்தும் மக்கள்… ஊரடங்கை கடுமையாக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு?

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை அதிதீவிரமாகப் பரவிவருகிறது. குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் தொடங்கியது. அப்போது பேசிய ஸ்டாலின், தாங்கள் பொறுப்பேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் போட்டார். மேலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதையும்,
 

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை அதிதீவிரமாகப் பரவிவருகிறது. குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அதன்படி தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் தொடங்கியது. அப்போது பேசிய ஸ்டாலின், தாங்கள் பொறுப்பேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் போட்டார். மேலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதையும், யாரும் பாதிக்கப்படாத வண்ணம் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.

ஆனால் அரசு அளித்துள்ள தளர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர் எனவும், இந்தத் தளர்வுகளை நீட்டிக்கலாமா அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாமா என கருத்துகளைக் கூறவும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும் வேண்டுகோள் விடுத்தார்.