×

”தவறான தகவல்” – சுகாதார துறை இயக்குநர்களுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் !

நீதிமன்றத்துக்கு தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததால், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மற்றும் முன்னாள் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது . தமிழகத்தில் 33 மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான 2014 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. அப்போது டாக்டர் தினேஷ்குமார் விண்ணப்பம் செய்துள்ளார். அவரது பெயர் எம்பிசி/டிசி பிரிவு காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதே பிரிவில், டாக்டர் வினோத் என்பவர் பணி
 

நீதிமன்றத்துக்கு தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததால், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மற்றும் முன்னாள் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது .

தமிழகத்தில் 33 மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான 2014 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. அப்போது டாக்டர் தினேஷ்குமார் விண்ணப்பம் செய்துள்ளார். அவரது பெயர் எம்பிசி/டிசி பிரிவு காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

அதே பிரிவில், டாக்டர் வினோத் என்பவர் பணி நியமனம் பெற்று, பின்னர் பணியில் இருந்து ராஜினாமா செய்தார். எனவே அந்த காலியிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள தன்னை நியமிக்க வேண்டும் என தினேஷ்குமார் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த காலியிடத்தை  டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைத்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து , தினேஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனுதாரரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், அவருக்கு உரிய ஆணையை அளிக்கவில்லை என கூறி
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இணைச் செயலாளர் மட்டத்திலான அதிகாரி விசாரணை செய்து, பொது சுகாதாரம் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்து, நேரத்தை வீணடித்ததாக தற்போதை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.