×

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய 5 குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். நிவர் புயலைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், நேற்று காலையில் இருந்து நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் கடந்த 30 மணி நேரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல்
 

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய 5 குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

நிவர் புயலைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், நேற்று காலையில் இருந்து நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் கடந்த 30 மணி நேரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியால் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை பெய்துவருகிறது. சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயலால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அனைத்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அடங்கிய 5 குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

  • சென்னை மாவட்டம் – அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் நியமனம்
  • கடலூர் மாவட்டம் – அமைச்சர்கள் தங்கமணி,
    எம்.சி.சம்பத்
  • திருவாரூர் – அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,
    காமராஜ்
  • நாகை – எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் – செங்கோட்டையன், பெஞ்சமின்