×

“பெருந்தொற்று பரவிய பேரிடர் காலத்திலும் மருத்துவக் கடவுள்களின் மகத்துவப் பணி” : அமைச்சர் விஜயபாஸ்கரின் நெகிழ்ச்சி கவிதை!

மருத்துவர்கள், செவிலியர்கள் உழைப்பு தன்னிகரற்றது. நாம் வாழ, நம் குடும்பம் உயிர் வாழ அவர்கள் நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். . பொதுநலமும் கருணை உணர்வும் மிக்க மனித சேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை செவ்வனே செய்து நம்மை பாதுகாக்கும் அரணாக விளங்கி வருபவர்கள் மருத்துவர்கள். அதுவும் இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் இந்த உலகம் இதை உணர்ந்திருக்கிறது. இந்த உலகமே தற்போது மருத்துவர்களை தான் நம்பி இருக்கிறோம். உலகமே முடங்கிய வீட்டினுள்
 

மருத்துவர்கள், செவிலியர்கள் உழைப்பு தன்னிகரற்றது. நாம் வாழ, நம் குடும்பம் உயிர் வாழ அவர்கள் நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். . பொதுநலமும் கருணை உணர்வும் மிக்க மனித சேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை செவ்வனே செய்து நம்மை பாதுகாக்கும் அரணாக விளங்கி வருபவர்கள் மருத்துவர்கள்.

அதுவும் இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் இந்த உலகம் இதை உணர்ந்திருக்கிறது. இந்த உலகமே தற்போது மருத்துவர்களை தான் நம்பி இருக்கிறோம். உலகமே முடங்கிய வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் போதும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்களுக்காக சேவை ஆற்றும் மருத்துவர்களின் தொண்டு என்றுமே போற்றத்தக்கது.
அப்படிப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ சமுதாயத்திற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்தும் நன்றியும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“கண்கள் உறங்குவதும்
இதயம் உறங்காமல் இருப்பதும்
மருத்துவக் கடவுள்களின்
மகத்துவப் பணியால்
நரம்புகளில் கருணையை நிரப்பி
நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி
தன்னுயிருக்கு அஞ்சாது
பெருந்தொற்று பரவிய பேரிடர் காலத்திலும் கனிவோடு கடமையாற்றும் உங்களுக்கு #மருத்துவர்தினவாழ்த்துக்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.