×

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் எந்த இடத்திலும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு கிடையாது. நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
 

கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் எந்த இடத்திலும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு கிடையாது. நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பது குறித்து அவசர சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது. பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கரோனா வைரஸ் தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் அதிகப்படியாக 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழகத்திற்கு 300 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான பரிசோதனை நடத்தப்படும்” என தெரிவித்தார்.