×

உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு- அமைச்சர் விஜயபாஸ்கர்

உலகத்திலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை சதவீதம் குறைவாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல் நிலையில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவுப்படி கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம்
 

உலகத்திலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை சதவீதம் குறைவாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல் நிலையில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவுப்படி கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் வீடியோ காலில் பேசினேன், அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதேபோல் அந்த வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு பேசினோம், இவ்வாறு பேசுவது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது புதுக்கோட்டை போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது போன்ற அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகித சதவீதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் புள்ளி 7 சதவீதம் பேர்தான் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளும் தங்களது சேவையை தொடங்கியுள்ளது, அவர்களுக்கும் அரசு உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறது. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களையும் தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.