×

மீண்டும் முழு ஊரடங்கா? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை அங்கு 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 12,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்நிலையில் கோவை இஎஸ்ஐ
 

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை அங்கு 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 12,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவகல்லூரி மருத்துவம்னையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவெடுப்பார். அதாவது தனிமனித வாழ்வாதாரம் , கொரோனா தடுப்பு , கொரோனா குணப்படுத்துதல் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மருத்துவ குழு பரிந்துரை பேரில் முழு ஊரடங்கை முதல்வர் பரிசீலிப்பார். சென்னையில் இருந்து கொரொனா நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு மாற்றப்போவதாகவும், அதற்கான ஆய்வு நடப்பதாகவும் வந்த செய்தி விஷமத்தனமான வதந்தி

சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும். கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளோம். பிறந்து 3 நாளான குழந்தை முதல் வயதானவர்கள் வரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்த 280 பேர் மருந்தே இல்லாமல் குணமடைந்தனர். சென்னையில் கொரோனா பரவல் சவாலாக இருந்தாலும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். சென்னையில் இருந்து நோயாளிகள் யாரும் கோவை கொண்டு வர திட்டமில்லை