×

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை சரியான பாதையிலேயே செல்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 500 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை 263 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதில் 43 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை சேலத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை. மருத்துவர்கள் யாரும் பாதிக்கவில்லை. இந்தியாவிலேயே அதிகளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர். ஆரம்பநிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கொண்டு பயம் தேவையில்லை. சிறிய அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவமனையை அனுகவேண்டும்” எனக் கூறினார்.