×

தமிழகத்தில் கொரோனா தொற்று 1.7% என்ற அளவில் குறைந்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்று 1.7% என்ற அளவில் குறைந்துள்ளது, இருப்பினும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை செய்யப்பட்டு வருவதால் உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசும் பிரதமரும் தமிழக அரசைப் பாராட்டி வருகின்றனர். பிரிட்டன் நாட்டிலிருந்து வரக் கூடியவர்களை கண்காணிக்க விமான நிலையம் மற்றும் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர
 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்று 1.7% என்ற அளவில் குறைந்துள்ளது, இருப்பினும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை செய்யப்பட்டு வருவதால் உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசும் பிரதமரும் தமிழக அரசைப் பாராட்டி வருகின்றனர்.

பிரிட்டன் நாட்டிலிருந்து வரக் கூடியவர்களை கண்காணிக்க விமான நிலையம் மற்றும் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் விமான நிலையங்கள் மற்றும் அண்டை மாநில எல்லைப் பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த 2,800 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.