×

மருத்துவ உள் இட ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு 200% அதிமுகவே காரணம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் சீர்மிகு முயற்சியால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார், இது வரவேற்கத்தக்கது, இதற்காக தமிழக ஆளுநருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மூலம் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை, வரப்பிரசாதத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது அதிமுக அரசின்
 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் சீர்மிகு முயற்சியால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார், இது வரவேற்கத்தக்கது, இதற்காக தமிழக ஆளுநருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மூலம் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை, வரப்பிரசாதத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது அதிமுக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை. இந்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியதும், ஆளுநர் ஒப்புதல் அளித்ததையும் அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்க கூடிய வகையில் முதலமைச்சரின் முயற்சியால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது.

விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும், ஒட்டுமொத்த மக்களும் முதலமைச்சரின் செயல்பாடுகளையும், அதிமுக அரசின் முயற்சிகளையும் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க நூற்றுக்கு 200 சதவீதம் அதிமுக அரசுதான் காரணம், இது அனைத்து மக்களுக்கும் தெரியும், இந்த வெற்றிக்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது” எனக் கூறினார்.