×

மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை 444 மரணங்கள் விடுபட்டுள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவின் பமையப்புள்ளியாக மாறியிருக்கும் சென்னையில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மொத்த பாதிப்பு விகிதத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சென்னையில் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் மட்டும் 224 உயிரிழப்புகள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு இருமடங்கிற்கும் அதிகமாக மொத்தம் 460 உயிரிழப்புகள் பதிவாகிதாக தகவல் வெளியானது. ஆனால் சென்னை மாநகராட்சியின் பதிவேட்டில் இருப்பதை
 

தமிழகத்தில் கொரோனாவின் பமையப்புள்ளியாக மாறியிருக்கும் சென்னையில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மொத்த பாதிப்பு விகிதத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சென்னையில் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி சென்னையில் மட்டும் 224 உயிரிழப்புகள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு இருமடங்கிற்கும் அதிகமாக மொத்தம் 460 உயிரிழப்புகள் பதிவாகிதாக தகவல் வெளியானது. ஆனால் சென்னை மாநகராட்சியின் பதிவேட்டில் இருப்பதை விட 236 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் பராமரித்து வரும் உயிரிழப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

ஒருமாதத்திற்கு பின் இந்த மரணங்கள் குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும் இன்றைய கொரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் நிகழும் கொரோனா மரணங்கள் தொடர்பாக, மருத்துவர் வடிவேல் தலைமையிலான நிபுணர் குழு அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.