×

‘அடிபட்டுக் கிடந்த நபருக்கு’.. கொட்டும் மழையிலும் முதலுதவி அளித்த அமைச்சர்: குவியும் பாராட்டு!

அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள் சாலைகளில் காரில் செல்லும் போது, ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு தன்னலம் பாராது உதவும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் பல முறை மக்களுக்கு உதவி செய்து, மக்கள் மனதில் தனி இடத்தை பெற்றிருக்கிறார். கடந்த வாரம் கூட அவர் திருச்சி – மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, கர்ப்பிணி பசு ஒன்றன் மீது கார் மோதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் பதைத்த
 

அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள் சாலைகளில் காரில் செல்லும் போது, ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு தன்னலம் பாராது உதவும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் பல முறை மக்களுக்கு உதவி செய்து, மக்கள் மனதில் தனி இடத்தை பெற்றிருக்கிறார்.

கடந்த வாரம் கூட அவர் திருச்சி – மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, கர்ப்பிணி பசு ஒன்றன் மீது கார் மோதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் பதைத்த விஜயபாஸ்கர், உடனடியாக காரில் இருந்து இறங்கி பசுவிற்கு முதலுதவி அளித்தார்.

ஆனால், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே அந்த கர்ப்பிணி பசு உயிரிழந்ததால் வேதனை அடைந்தார். மாட்டின் உரிமையாளருக்கு உதவி அளிப்பதாக உறுதியளித்த விஜயபாஸ்கர், விம்மியபடி அங்கிருந்து புறப்பட்டார். இந்த நிலையில், கொட்டும் மழையிலும் சாலையில் கிடந்த முதியவருக்கு உதவி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

திருச்சி விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த விஜயபாஸ்கர், வழியில் ஒரு முதியவர் விபத்தில் அடிபட்டு சாலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக காரில் இருந்து இறங்கி அந்த நபருக்கு முதலுதவி அளித்தார். அப்போது, அங்கு மழை பெய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாத விஜயபாஸ்கர் முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனித நேயம் மிக்க அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த உதவிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிகின்றன.