×

சாலை விபத்தில் உயிருக்கு போராடியவருக்கு உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர் – வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கர் சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த செயல் பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. அதில் முக்கிய நபராக இருந்து வருபவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கள நிலவரங்களை தெரிந்து கொள்வது என மிகவும் சுறுசுறுப்பாக தொடர்ந்து
 

அமைச்சர் விஜயபாஸ்கர் சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. அதில் முக்கிய நபராக இருந்து வருபவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கள நிலவரங்களை தெரிந்து கொள்வது என மிகவும் சுறுசுறுப்பாக தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அந்த வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு முதலுதவி அளித்ததுடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கான வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், 108 ஆம்புலன்ஸ் விரைவாக வந்து சேர்ந்தது. மருத்துவ காலத்தில் மக்களுக்கு இது சரியாக உதவி வருகிறது என்று கூறியுள்ளதுடன் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.