×

“செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை பாதிக்கப்படாது” – அமைச்சர் உறுதி!

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அமைச்சர் உதயகுமார், அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் வேலுமணி, அரசு செயலாளர்கள், சென்னை ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு
 

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அமைச்சர் உதயகுமார், அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் வேலுமணி, அரசு செயலாளர்கள், சென்னை ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, 12 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் போது பெய்யும் இயல்பான மழையே பெய்து வருகிறது. கனமழை பெய்தாலும், நீர் வடிவதற்கான வடிகால் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியின் நீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயருகிறது. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. சென்னை மக்களுக்கு 100% எந்த பாதிப்பும் வராது என தெரிவித்தார். மேலும், மருத்துவ கழிவுகளை முறையாக வெளியற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.