×

‘கரை தட்டிய கப்பலாக இருக்கிறது திமுக’ .. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்

சமீப காலமாக திமுகவில் இருந்து பலர் வெளியே வந்து பிற காட்சிகளில் சேர்ந்து கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்எல்ஏ குக செல்வம், டெல்லி சென்று ஜெ.நட்டாவை சந்தித்தார். அதனால் அவரை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பிறகு குக செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும், அந்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கு.க செல்வத்தை நீக்கி விட்டார் ஸ்டாலின். இவ்வாறு திமுகவில்
 

சமீப காலமாக திமுகவில் இருந்து பலர் வெளியே வந்து பிற காட்சிகளில் சேர்ந்து கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்எல்ஏ குக செல்வம், டெல்லி சென்று ஜெ.நட்டாவை சந்தித்தார். அதனால் அவரை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பிறகு குக செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும், அந்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கு.க செல்வத்தை நீக்கி விட்டார் ஸ்டாலின். இவ்வாறு திமுகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திமுக தற்போது கரை தட்டிய கப்பலாக உள்ளது என கூறினார். மேலும், ஜெயலலிதா இருந்த போது அரசின் திட்டங்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்ல முடிந்தது என்றும் தற்போது அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சவால்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.