×

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புரியாமல் குற்றம்சாட்டி வருகிறார்- அமைச்சர் மா சுப்ரமணியன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா கூடுதல் படுக்கை வசதியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், “தற்போது தமிழகம் முழுவதும் தொற்று வேகமாக குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் தமிழக அரசின் முன் தடுப்பு பணிகள்தான். தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 3 ஆயிரம் மருத்துவர்கள், 6500 செவிலியர்கள் மற்றும் 13 ஆயிரத்து 500 முன்கள
 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா கூடுதல் படுக்கை வசதியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், “தற்போது தமிழகம் முழுவதும் தொற்று வேகமாக குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் தமிழக அரசின் முன் தடுப்பு பணிகள்தான். தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 3 ஆயிரம் மருத்துவர்கள், 6500 செவிலியர்கள் மற்றும் 13 ஆயிரத்து 500 முன்கள பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள உத்தரவிப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதைவிட அரசு மருத்துவ மனைகளுக்கு அதிகளவில் வரும் சூழ்நிலை உருவாகும்

தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தும் கொரோனா தடுப்புப் பணிகளை அதிமுக அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர்; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புரியாமல் குற்றம்சாட்டி வருகிறார்” எனக் கூறினார்.