×

வளமையான வாழ்வுக்கு மகாவிஷ்ணுவின் அம்சமான புதன் வழிபாடு!

பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கொடிகள், கீரைகள் என அனைத்தும் பச்சை நிறத்திலே இருக்கின்றன. நவக்கிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு,செல்வ வளமையை கொடுக்கும் கிரகமாக புதன் பகவான் திகழ்கிறார். புதன்கிழமை விரதமிருந்தால்புகழை அள்ளிக்கொடுக்கும். நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம்படித்து விரதம்
 

பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கொடிகள், கீரைகள் என அனைத்தும் பச்சை நிறத்திலே இருக்கின்றன. நவக்கிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு,செல்வ வளமையை கொடுக்கும் கிரகமாக புதன் பகவான் திகழ்கிறார். புதன்கிழமை விரதமிருந்தால்
புகழை அள்ளிக்கொடுக்கும். நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவராக இருக்கிறார்.

அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம்
படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும். புதன் பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் மகாவிஷ்ணுவின் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள். புதன் கிழமை விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும்.

எனவே புதன் கிழமை விரதம் இருப்பவர்கள் மகாவிஷ்ணுவின் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.