×

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு : மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை !

ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊர் அடங்கிஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்பதால் , மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு
 

ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊர் அடங்கிஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்பதால் , மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்த ஊரடங்கு பயனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் சென்னையிலும் கொரோனா குறைந்து வருகிறது . இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனைக் கருதி காய்கறி, மளிகை பொருட்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வண்ணம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கு மாவட்டங்களில் கோவை திருப்பூர், ஈரோடு நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வழங்கலாம் எனவும் சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.