×

முழு உடல் பரிசோதனை செய்யனுமா? அப்ப ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு போங்க?

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய பரிசோதனை முறை கொரோனாவிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இன்று வரை 20ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். ஆனால், கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், கடந்த
 

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய பரிசோதனை முறை கொரோனாவிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இன்று வரை 20ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். ஆனால், கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், கடந்த 4மாதங்களாக இயங்கவில்லை. மீண்டும் ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முதல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தொடங்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 50 முதல் 60பேருக்கு அம்மா முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது 10 முதல் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

அம்மா Gold, Diamond, platinum என 3 நிலைகளாக பரிசோதனை செய்யப்படும். அதில், அம்மா Gold என்ற பரிசோதனையில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் இரத்த பரிசோதனை, இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய 1000 ரூபாயும், அம்மா Diamond- இல் இதய துடிப்பு அளவீடு, புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் மேற்கொள்ள 2ஆயிரம் ரூபாய் செலவில் செய்யப்படுகிறது. மேலும், அம்மா பிளாட்டினம் பரிசோதனையில், அம்மா டைமன்ட் பரிசோதனைகள் உட்பட, மார்பக சிகிச்சை பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகளை 3ஆயிரம் செலவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் கூடுதலாக பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய முறையானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் அம்மா பிளாட்டினம் உட்பட, நுரையீரல் சார்ந்த பரிசோதனை, விரிவான கண் பரிசோதனை, பார்வை குறைபாடு பரிசோதனை, கண் நரம்பு பரிசோதனை, மூச்சாற்றல் அளவி ஆகிய பரிசோதனைகள் 4ஆயிரம் செலவில் செய்யப்பட்டுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.