×

‘அநீதி புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சரி, நீங்கள்….’ திமுகவைச் சீண்டும் ‘அதிமுக’ மருது அழகுராஜ்

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கையில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் கடை திறந்து வைத்தாக, திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸூம் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன்பிறகு இருவரும் மரணமடைந்தனர். அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகள் இப்பிரச்னையின் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் எனக் கோரிவந்தன. சாத்தான்குள விவகாரத்தில் பல புதிய விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. காவல் துறை துன்புறுத்தலே இருவரின் மரணத்திற்குக் காரணம் எனப்
 

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கையில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் கடை திறந்து வைத்தாக, திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸூம் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன்பிறகு இருவரும் மரணமடைந்தனர். அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், எதிர்கட்சிகள் இப்பிரச்னையின் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் எனக் கோரிவந்தன.

சாத்தான்குள விவகாரத்தில் பல புதிய விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. காவல் துறை துன்புறுத்தலே இருவரின் மரணத்திற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இருவரின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். திமுக மகளிரணி தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவந்தார்.

இந்த நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், திமுகவினரைச் சீண்டும் விதமாக ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார்.

அதில், “அநீதி புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இழப்புக்குள்ளானவர்களுக்குக் கழக அரசு உரிய உதவிகள் செய்யும். இதில் கழகமோ கழக அரசோ செய்த குற்றம் ஏதுமில்லை

அதுசரி, உங்க குடும்பத்துக்காகவே பலிபீடம் ஏற்றப்பட்ட தா.கி, அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக், பால்மலர், பத்திரிக்கை ஊழியர்கள்…” என்று பதிந்துள்ளார்.