×

மீண்டும் மெரினாவுக்குப் பூட்டு? சென்னை மாநகராட்சி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதால் மீண்டும் மெரினா கடற்கரைக்குள் மக்களை அனுமதிக்க தடை விதிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
 

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதால் மீண்டும் மெரினா கடற்கரைக்குள் மக்களை அனுமதிக்க தடை விதிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம் ஆகும். அந்த வகையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

காசிமேடு உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.