×

`அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தணும்!’- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கொந்தளிக்கும் பெற்றோர்கள்

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
 

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தேர்வுக் கட்டணத்தை இதுவரை செலுத்தாத மாணவர்கள் வரும் 13 மற்றும் 14ம் தேதிக்குள் அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்விக் கட்டணத்தையே செலுத்த வழியில்லாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.