×

ஆர்.பி.உதயகுமாரும், ராஜேந்திர பாலாஜியும் இன்னும் சில தினங்களில் மத்திய சிறையில் இருப்பார்கள்- மாணிக்கம் தாகூர்

ஆர் பி உதயகுமாரும் கே டி ராஜேந்திர பாலாஜியும் சிலகாலம் இருக்கக்கூடிய மாப்பிள்ளைகள், அதற்குமேல் அவர்கள் இருக்கக்கூடிய இடம் மதுரை மத்திய சிறைச்சாலையிலோ அல்லது சென்னை சிறையிலோ தான் என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டஅரங்கத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத்தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஎம் கிசான் திட்டத்தில் 89,000
 

ஆர் பி உதயகுமாரும் கே டி ராஜேந்திர பாலாஜியும் சிலகாலம் இருக்கக்கூடிய மாப்பிள்ளைகள், அதற்குமேல் அவர்கள் இருக்கக்கூடிய இடம் மதுரை மத்திய சிறைச்சாலையிலோ அல்லது சென்னை சிறையிலோ தான் என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டஅரங்கத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத்தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிஎம் கிசான் திட்டத்தில் 89,000 பயனாளிகள் விருதுநகர் மாவட்டத்தில் இருப்பதாகவும் அதில் 2662 பேர் போலியாக சேர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இந்த கூட்டத்தில் தெரிவித்தார். கிசான் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது இதில் கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது. ஏழை விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய பணத்தை சிலர் ஆளுங்கட்சியின் உதவியோடு திருடியுள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர்ந்து நீட் தேர்வை ஆதரித்து வருவது வருத்தத்துக்குரியது. அனிதாவில் தொடங்கிய மரணம் இன்றும் தொடர்கிறது. ஜென்டில்மேன் படத்தைப் போல சாமானியர்கள் மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆர். பி உதயகுமாரும் கே. டி ராஜேந்திர பாலாஜியும் சிலகாலம் இருக்கக்கூடிய மாப்பிள்ளைகள் அதற்குமேல் அவர்கள் இருக்ககூடிய இடம் மதுரை மத்திய சிறைச்சாலையிலோ அல்லது சென்னை சிறையிலோ தான் இருப்பார்கள்” எனக் கூறினார்.