×

அம்பிகையின் அழகில் மயங்கிய மகாதேவன்!

அக்னியிலிருந்து தோன்றிய உலக அன்னையான லலிதாம்பிகையின் அழகில் மகாதேவனே ஒரு பொழுது கண் சிமிட்டாமல் சிலையாக நின்றாராம். இவ்வுலகின் மகாசக்தியான லலிதாம்பிகையின் அழகினை வர்ணிக்கப்படும் பொழுது நாம் அதில் ஒன்றிவிடுவோம். கரிய நீண்ட கூந்தல், கஸ்தூரி திலகம், அன்பான கண்கள், அந்த கரு விழிகள் ஏரியில் மீன்கள் உலவுவது போல் உலவுகின்றன. மூக்கில் நட்சத்திரங்கள் மின்ன, காதில் சந்திர சூரியன் ஒளிர, கன்னங்கள் பளிங்காய் ஜொலிக்க, பளீர் என முத்துப்பற்கள் பிரகாசிக்க வாசனை கற்பூரம் சேர்த்த தாம்பூலம்
 

அக்னியிலிருந்து தோன்றிய உலக அன்னையான லலிதாம்பிகையின் அழகில் மகாதேவனே ஒரு பொழுது கண் சிமிட்டாமல் சிலையாக நின்றாராம். இவ்வுலகின் மகாசக்தியான லலிதாம்பிகையின் அழகினை வர்ணிக்கப்படும் பொழுது நாம் அதில் ஒன்றிவிடுவோம். கரிய நீண்ட கூந்தல், கஸ்தூரி திலகம், அன்பான கண்கள், அந்த கரு விழிகள் ஏரியில் மீன்கள் உலவுவது போல் உலவுகின்றன.

மூக்கில் நட்சத்திரங்கள் மின்ன, காதில் சந்திர சூரியன் ஒளிர, கன்னங்கள் பளிங்காய் ஜொலிக்க, பளீர் என முத்துப்பற்கள் பிரகாசிக்க வாசனை கற்பூரம் சேர்த்த தாம்பூலம் தரித்தவளாய் காட்சி தருகின்றாள் என அம்பிகையை விவரிக்கிறது லலிதா சகஸ்ரநாமம். இதை படிக்கும் பொழுது மனம் அதில் சரணடைந்து விடும். அம்பிகையின் குரல் சரஸ்வதி மீட்டும் வீணையின் ஒலியினை விட இனிமை என்று படிக்கும் பொழுது மனம் அக்குரலைக் கேட்க ஆசைப்படும்.

அந்த புன்முறுவலின் அழகு கண்டு சிவபிரானே தன் கண்களை நகர்த்தமுடியாமல் சிலையாக நின்றாராம். இப்படியெல்லாம் கூறப்படும் அம்பிகையினை நம் கவனத்தால், உள்ளுணர்வால் ஒருமித்து தியானம் செய்தால் காண முடியும். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையைப்பற்றி கூறுகையில், ‘நான் ஒரு யந்திரம் நீயே அதனை இயக்குபவன்’ என வியாபித்திருக்கிறார்.

மகாதேவனே மயங்கிய அன்னையின் திருவுருவத்தின் பெருமைகள் நிறைந்த லலிதாம்பிகையை லலிதா சகஸ்ரநாமம், லலிதாத்ரிஸதி சொல்லி வழிபட்டு அனைத்து உயர்வுகளும், நலன்களும் இந்த நவராத்திரியில் பெறலாம். அன்னையின் அளவில்லாத அன்பை பெறுவோமாக!
தேவி சரணம்! ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’

-வித்யா ராஜா