×

மதுரை டூ சென்னை… மதியம் 12 மணிக்கு மேல பஸ் ஒரு இன்ச் கூட நகராது!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த இடைப்பட்ட நேரங்களில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கும் பொருந்தும். இதனால் பகல் நேரங்களில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும்
 

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த இடைப்பட்ட நேரங்களில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கும் பொருந்தும்.

இதனால் பகல் நேரங்களில் அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, தேனி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் அதே நேரம் ஊரடங்கு ஆரம்பிக்கும் நேரமான 10 மணிக்குள் சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இச்சூழலில் நாளை முதல் மதுரையிலிருந்து சென்னைக்கான அரசுப் பேருந்து சேவை நண்பகல் 12 மணியுடன் நிறுத்தம் செய்யப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தெற்கு ரயில்வே தரப்பில் ரயில்களைக் குறைக்கப்படும் என்றோ, சேவை நிறுத்தப்படும் என்றோ தகவல் வெளியாகவில்லை. அனைத்து ரயில்களிலும் இனி கூட்டம் அலைமோதும் என்பது மட்டும் நிச்சயம்.