×

“மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்” : இதுவரை மதுரையில் 1 லட்சத்து 83 ஆயிரம் வசூல்!

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 786 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள் , நடந்து சென்றவர்களிடம் கடந்த 2 நாட்களாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த
 

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 786 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள் , நடந்து சென்றவர்களிடம் கடந்த 2 நாட்களாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 1762 பேரிடம் அபராத தொகையாக ரூபாய் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து நேற்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.