×

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நள்ளிரவில் களமிறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர், எம்.பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இது வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் கவனத்திற்கு எட்டியுள்ளது. அந்த மருத்துவமனையில் சுமார் 1,500 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இது வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் கவனத்திற்கு எட்டியுள்ளது.

அந்த மருத்துவமனையில் சுமார் 1,500 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணி ஆகியும் வரவில்லை. இதனால், அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் மூர்த்தி, தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு சென்று மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இரவு 2 மணி வரை அங்கேயே காத்திருந்து மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பிறகு தான் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனிடையே, ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆக்சிஜன் லாரியை வரவழைத்துள்ளார். அமைச்சர் மூர்த்தியுடன் மதுரை எம்.பி வெங்கடேசனும் உடனிருந்து அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மூர்த்தி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிடில் நள்ளிரவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் என மருத்துவமனை பணியாளர்கள் கூறுகின்றனர். 1,500 மக்களின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் இருவரும் நள்ளிரவு வரை காத்திருந்து ஆக்சிஜன் லாரியை வர வைத்ததோடு மட்டுமல்லாமல் தனியார் மையத்திலிருந்து ஆக்சிஜன் ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.