×

“காவல் மரணங்கள் மனிதத் தன்மையற்றவை”- மதுரை உயர்நீதிமன்றக் கிளை

தமிழகத்தில் தான் காவல் மரணங்கள் அதிகமாக நிகழ்வது போல தெரிவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதரின் ஜாமீன்
 

தமிழகத்தில் தான் காவல் மரணங்கள் அதிகமாக நிகழ்வது போல தெரிவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். ‘காவல் மரணங்கள் மனிதத் தன்மையற்றவை. ஜனநாயகத்திற்கு எதிரான இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் காவல் மரணங்கள் நிகழ்வது போல தெரிகிறது. மக்களை மோசமாக நடத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் நிலையம் செல்லும் பொதுமக்களை போலீசார் முறையாக நடத்த வேண்டும் என்றும் புகார் அளிக்க வருபவர்களின் உரிமைகள் பற்றி காவல் நிலையங்களில் தகவல் பலகை வைக்கவேண்டும் என்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு அவை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.