×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச் நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கும் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, கட்டுமான பணி மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ்
 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கும் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, கட்டுமான பணி மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார். அதே போல, எம்.ஜி.ஆர் மருத்துவமனையின் துணை வேந்தராக இருக்கும் டாக்டர் சுதா சேஷயன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.