×

மதுரை ஆதீனம் உடல்நிலை கவலைக்கிடம்!!

மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 77 வயதான மதுரை ஆதீனம் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை
 

மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 77 வயதான மதுரை ஆதீனம் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை ஆதீனம் தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமணங்களில் ஒன்று. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் மடத்தில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி 292 பேர் பீடாதிபதியாக இருந்து வருகிறார்.