×

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு… உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு கூறியிருந்தது. இதனால் தங்களது இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறிசீர்மரபினர் உள்பட பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான
 

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு கூறியிருந்தது. இதனால் தங்களது இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறிசீர்மரபினர் உள்பட பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வகையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் 183 சாதியினர் உள்ளனர். இந்நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதஉள்ஒதுக்கீடு என்பது சட்டவிரோதமானது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சாதியினர் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இதுதொடர்பாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் எந்தப் பரிந்துரையும் வழங்கவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடமும் இதுதொடர்பாக தமிழக அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. அவசர கதியில் தேர்தலை மனதில் கொண்டு இப்படியொரு இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.மணிமாறன், பி.ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.