×

முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு… லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் ரூ.2 கோடி நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்க முடியாமல் சுகாதாரத்துறை திணறியது. பேரிடரிலிருந்து மக்களை காக்க மருத்துவக் கட்டமைப்பை பன்மடங்கு அதிகரிக்க வேண்டியிருந்ததால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பணம் நிச்சயமாக கொரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதன் விபரங்கள்
 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்க முடியாமல் சுகாதாரத்துறை திணறியது. பேரிடரிலிருந்து மக்களை காக்க மருத்துவக் கட்டமைப்பை பன்மடங்கு அதிகரிக்க வேண்டியிருந்ததால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பணம் நிச்சயமாக கொரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதன் விபரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். முதல்வரது வேண்டுகோளுக்கு இணங்க தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் நிதியுதவி வழங்கினர். அதனை தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு லைகா புரொடக்‌ஷன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளார். அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் லைகா நிர்வாகி GKM தமிழ்குமரன், நிருதன் மற்றும் கெளரவ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.