×

தமிழகத்தில் பொது முடக்க விதிமீறல் அபராதம் 16 கோடியை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,949 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 55,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,949 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 55,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.16 கோடியை தாண்டியுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் ரூ.16.19 கோடி அபராதம் வசூலாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். பொது முடக்க விதிகளை மீறிய 5,78,854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 7,70,299  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 7,04,057  வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.